தமிழ்நாடு
பாஜகவில் இணைகிறாரா சசிகலா? நயினார் நாகேந்திரன் பேட்டி

சசிகலா பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் திடீரென அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்.
அதன்பிறகு தனியாக அரசியல் செய்து கொண்டிருந்த பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவில் இணைந்து கொண்டார். தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் கையில்தான் அதிமுக இருக்கும் நிலையில் சசிகலாவை சேர்க்க இருவருமே மறுத்து வருகின்றனர். இருப்பினும் சசிகலா அதிமுகவில் இணைய தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா பாஜகவில் இணைய வேண்டும் என்றும் அவர் பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவின் அழைப்பை ஏற்று சசிகலா பாஜகவுக்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















