கிரிக்கெட்
கடைசி நேரத்தில் சொதப்பிய ஐதராபாத்: மும்பை அபார வெற்றி

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.
நேற்று டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் குவின்டன் டி காக் 40 ரன்களும், பொல்லார்டு 35 ரன்களும் ரோகித் சர்மா 32 ரன்களும் எடுத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 67 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்தது. மேலும் 11 ஓவர்களில் 90 ரன்கள் அடித்து விட்டதால் அந்த அணி மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன்பின் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தன. இதனை அடுத்து இறுதியில் 137 ரன்களுக்கு ஐதராபாத் அணி ஆட்டம் இழந்ததால், மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இதனை அடுத்து மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் பெங்களூர் அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் சென்னை அணி 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















