செய்திகள்
MTC ஓய்வூதியதாரர்கள் ஆயுட்காலச் சான்றிதழ் சமர்ப்பிப்பு – 2026 அப்டேட்!
Published
21 மணி நேரங்கள் agoon
By
Poovizhi
சென்னை மாநகர் போக்குவரத்து கழக (MTC) ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாநகர் போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் அறிவிப்பின்படி, ஓய்வூதியதாரர்கள் தங்கள் சான்றிதழை தலைமை அலுவலகம், பணிமனை அல்லது இ-சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்க முடியும்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 15,300க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி நம்பகம் வாயிலாக, ஓய்வூதியம் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுட்காலச் சான்றிதழை கடைசியாக பணியாற்றிய அலுவலகம் அல்லது பணிமனையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழ் ஜனவரி முதல் மார்ச் 15, 2026 வரை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சான்றிதழ் சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய உத்தரவு ஆணையை உடன் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தங்கள் பணிமனை அடிப்படையில் கீழ்க்கண்ட இடங்களில் சமர்ப்பிக்க வேண்டும்:
மாதவரம் பணிமனை – பழைய மாதவரம் பணிமனை உறுப்பினர்கள்
தலைமை அலுவலக பணியாளர்கள் – தலைமை அலுவலகம்
பூந்தமல்லி – கோயம்பேடு
பெரும்பாக்கம் – செம்மஞ்சேரி
பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம் (PRD) – அதே இடம்
மண்டல தொழிற்கூடம் (RWS) – அதே இடம்
கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகம் – கே.கே.நகர் பணிமனை
குரோம்பேட்டை பேருந்து பிரிவு – குரோம்பேட்டை 4 பணிமனை
திருவொற்றியூர் – அண்ணாநகர் கிழக்கு
பெசன்ட் நகர் – அடையார்
கிளாம்பாக்கம் – கிளாம்பாக்கம்
மகாகவி பாரதி நகர் – மாதவரம்
மீதமுள்ள ஓய்வூதியதாரர்கள் தலைமை அலுவலகத்தை அணுகி தங்களது சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலதிக தகவலுக்கு: 044-2345 5801 Extn.271 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும், வீட்டுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது TNS-103 இணையதளம் மூலம், ஆதார் அட்டை, புகைப்படம், ஓய்வூதிய உத்தரவு ஆணை, வங்கி புத்தகம் மற்றும் கைபேசி எண்ணுடன் பதிவேற்றம் செய்யலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.












