Connect with us

வணிகம்

வேலையை விட்டால் 3 ஆண்டில் PF வட்டி நிற்குமா? உண்மையான EPFO விதிகள் என்ன சொல்கின்றன?

Published

on

ஒரு வேலையில் இருந்து விலகிய பிறகு, மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டால் தங்களுடைய பிராவிடண்ட் ஃபண்ட் (PF) கணக்கிற்கு வட்டி கிடைப்பது நிறுத்தப்படும் என்று பல ஊழியர்கள் தவறாக நம்புகின்றனர். ஆனால் இது முற்றிலும் உண்மை அல்ல.

எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆணையம் (EPFO) வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு ஊழியர் பணியில் இருந்து விலகிய பின்னரும் அவருடைய PF கணக்கில் தொடர்ந்து வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கியமான நிபந்தனை, அந்த PF கணக்கு யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே.

நீங்கள் வேலையை 3 ஆண்டுகளுக்கு முன்போ, 10 ஆண்டுகளுக்கு முன்போ விட்டிருந்தாலும், 58 வயதை அடையும் வரை அல்லது முழு PF தொகையையும் வித்ட்ரா செய்யும் வரை, உங்கள் PF கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் வட்டி சேர்க்கப்படும்.

EPFO விதிமுறைகளின்படி, ஒரு ஊழியர் பணியில் இருந்து விலகிய 36 மாதங்களுக்குப் பிறகும் அந்த PF கணக்கு “ஆக்டிவ்” (செயலில் உள்ள கணக்கு) எனக் கருதப்படுகிறது. 36 மாதங்கள் கடந்த பிறகு அந்த கணக்கு “இன்ஆக்டிவ்” (செயலற்றது) என வகைப்படுத்தப்படும். ஆனால் இந்த செயலற்ற நிலை என்றால் வட்டி நிறுத்தப்படும் என்பதல்ல. செயலற்ற PF கணக்குகளுக்கும் EPFO அறிவித்துள்ள வட்டி விகிதம் முழுமையாக வழங்கப்படும்.

2024–25 நிதியாண்டுக்கான PF வட்டி விகிதம் 8.25% ஆக EPFO நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில், PF வட்டி தொடர்பான வரி விதிகளை ஊழியர்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். வேலையை விட்ட பிறகு PF கணக்கில் கிடைக்கும் வட்டி, “பிற மூலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம்” (Income from Other Sources) எனக் கணக்கிடப்பட்டு வருமான வரிக்கு உட்படும். ஒரு நிதியாண்டில் PF வட்டி ரூ.50,000-ஐ கடந்தால், அதற்கு TDS விதிக்கப்படும்.

எந்தவிதமான குழப்பங்களையும் தவிர்க்க EPFO, அனைத்து பழைய PF கணக்குகளையும் “One Member, One PF Account” வசதி மூலம் தற்போதைய UAN உடன் இணைக்குமாறு மெம்பர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதன் மூலம் PF பேலன்ஸ்களை எளிதாக கண்காணிக்கவும், வட்டி பெறுவதிலும், வித்ட்ராயல் அல்லது டிரான்ஸ்ஃபர் செய்வதிலும் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட முடியும்.

உங்களுடைய PF பேலன்ஸ் மற்றும் சேர்க்கப்பட்ட வட்டியை EPFO மெம்பர் போர்டல் அல்லது UMANG செயலி மூலம் எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம். ஆகையால், நீங்கள் வேலையில் இருந்து விலகிய பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், PF சேமிப்பு பாதுகாப்பாக இருந்து தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதற்காக உங்கள் PF கணக்கு UAN-உடன் இணைக்கப்பட்டு, தனிப்பட்ட விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Een grote producent van institutionele textiel uit pakistan.