தமிழ்நாடு
விவேக் விரைவில் குணமாக முக ஸ்டாலின் வாழ்த்து!

காமெடி நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட கருவிகளின் உதவியால் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அவர் செலுத்திக் கொண்டதற்கும் அவருக்கு வந்த மாரடைப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் விவேக் விரைவில் குணமாக வேண்டும் என்று ஏற்கனவே தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.
சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்.
அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 16, 2021


















