Connect with us

இந்தியா

பிரதமர் மோடியின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் முறைகேடு, தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களுக்கு ரூ.129 கோடி அபராதம்

Published

on

இந்தியக் கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குழாய் நீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) திட்டமான தனது கனவுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார்.

ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தால் தொடங்கி 2024- குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இத்திட்டம். 2028 வரை நீட்டிக்கப்பட்டது. இது கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழற்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உருவாக்கப்பட்ட மாபெரும் திட்டம். இந்தத் திட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதியளிக்கும். பிரதமர் நேரடி கவனம் செலுத்தும் இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரக்கட்டுப்பாடு மிக முக்கியம் என்று ஒன்றிய அரசு விரும்பியது.

திட்டமிடல், ஒப்புதல் மற்றம் செயல்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் மாநில அரசுகளிடமே இருக்கிறது. ஒன்றிய அரசு தொழில்நுட்பம் மற்றம் நிதி உதவிகளை வழங்குகிறது. இத்திட்டம் வெறுமனே குடிநீர் வழங்குவதுடன் நில்லாமல் மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுதும் 113க்கும் மேற்பட்ட நீர் பர்சோதனை ஆய்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் 5 பெண்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 1.10 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குழாய்நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் வழக்கமான ஆய்வுகளின்போதுதான் சில மாநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் மற்றும் தர மீறல்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதில் நிதி முறைகேடு, திட்டச் செயல்பாட்டு விதிகளில் மீறல், முக்கியமாக, போடப்பட்ட குழாய்களின் தரத்தில் குறைபாடு ஆகிய பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த முறைகேடுகள் குறித்த விவரங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் கடும் கோபம் அடைந்தார். ஏனெனில், மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்த் திட்டத்தில், எந்தவிதமான மீறல்களையும் சகித்துக்கொள்ள முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

குஜராத், தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பு

பிரதமர் மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, திரிபுரா, அஸ்ஸாம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.129 கோடியே 67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்துக்கு மட்டும் ரூ.120 கோடியே 65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

பிற மாநிலங்களுக்கான அபராதத் தொகை:

ராஜஸ்தான்: ரூ.5.34 கோடி

மகாராஷ்டிரா: ரூ.2.02 கோடி

திரிபுரா: ரூ.1.22 கோடி

கர்நாடகா: ரூ.1.01 கோடி

அஸ்ஸாம்: ரூ.5.08 லட்சம்

தமிழ்நாடு: ரூ.3 லட்சம்

அபராதத் தொகையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து உடனடியாக வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதுவரை, மொத்தமாக ரூ.12 கோடியே 95 லட்சம் வசூலிக்கப் பட்டுள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.6.65 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக 20 மாநிலங்களில் 607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 62 துறை அதிகாரிகள், 969 ஒப்பந்ததாரர்கள், 153 மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்கள், ஒரு முன்னாள் அமைச்சர், 10 அதிகாரிகள், 8 ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படைத் திட்டத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டிருப்பது  அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Pvc cửa cuốn.