தமிழ்நாடு
‘மிளகு ரசம், பூண்டு ரசம் ஒரு க்ளாஸ் போதும்’- கொரோனாவை விரட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலே ஐடியா!(வீடியோ)

‘மிளகு ரசம், பூண்டு ரசம் குடித்தால் போதும் கொரோனா கிட்டவே வராது’ என பலே ஐடியா கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
தமிழக அரசு இந்தியாவுக்கான கொரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனாவை விரட்டுவதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும் பங்கு இருப்பதாகவும் இன்னும் பல தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காகவும் மக்கள் மத்தியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “தமிழக மக்களின் உணவுப் பழக்கம் தான் இன்று கொரோனாவை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் இன்று நம்முடைய உணவில் மிளகு, சுக்கு என பல உடல் நலத்துக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரியாமலேயே நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்கிறோம். இதனால் தான் கொரோனா வைரஸிடம் இருந்து தமிழகம் தப்பித்துள்ளது.
“Drink half/full glass rasam. Corona will run away or die,” says AIADMK minister KT Rajendra Balaji ????????♀️???? pic.twitter.com/3hezMgcNnc
— Shilpa Nair (@NairShilpa1308) January 12, 2021
மக்களே… தினமும் ஒரு க்ளாஸ் மிளகு ரசம் அல்லது பூண்டு ரசம் வச்சு குடிங்க. கொரோனா மட்டுமல்ல எதுவுமே உங்கட்ட வராது. ரசம் குடிச்சா வைரஸ் எல்லாம் செத்திடும் இல்லை ஓடிடும்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.













