Connect with us

தமிழ்நாடு

70 லட்சம் வாக்குகள் வித்தியாசம்: தலை சுற்ற வைக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Published

on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதில் வல்லவர். இவர் சமீபத்தில் பேசிய ஒன்று சலசலப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒட்டபிடாரம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது, இங்கு வலுவான கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. பலமான கூட்டணி சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகன் இங்கு 70 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்றார்.

ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு தலை சுற்றும் அளவுக்கு உள்ளது. காரணம் ஓட்டப்பிடாரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களே 2 லட்சத்து 27 ஆயிரமாக உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?