ga('set', 'anonymizeIp', 1);
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்,டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த பாதிப்பில் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் 90 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்பது உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி திறப்பதற்கு முன் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருவட்டார் ஊராட்சி…
தமிழகத்தில் கடந்த…
This website uses cookies.