தமிழ்நாடு
அண்ணாமலை வெளியிட்ட ஊழல் அமைச்சர்கள் பட்டியல்: இவர்கள் லிஸ்ட்லியேயே இல்லையே!

அண்ணாமலை வெளியிட்ட ஊழல் அமைச்சர்கள் பட்டியல்: இவர்கள் லிஸ்ட்லியேயே இல்லையே!
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்த நிலையில் சற்று முன் இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல் அமைச்சர்கள் பட்டியலில் செந்தில் பாலாஜி உள்பட ஒருசில அமைச்சர்களின் பெயர்கள் இருக்கலாம் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த இரு அமைச்சர்கள் மீதான ஊழல் ஆதாரங்களை பத்திரிகைகளுக்கு அவர் வெளியிட்டுள்ளார். பாஜக வழக்கறிஞர் பிரிவு இதை புகாராக, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச துறையில் அளிப்பார்கள் என்றும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில் ஏற்பட்ட ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அரசில் அரசியல் தலையீடு ஆகியவை குறித்து புத்தகமாக இம்மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு கவர்னரிடம் தேதி பெற்ற வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.