உலகம்
உலகின் மிக அதிக பள்ளிக்கட்டணம்.. ஒரு ஆண்டுக்கு இத்தனை கோடியா?

கல்வி, மருத்துவம் ஆகியவை சேவை என்பது மறந்து போய் தற்போது உலகின் மிகப்பெரிய வியாபாரமாக வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பாக கல்வி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் அரசின் வசம் கல்வி நிறுவனங்கள் இல்லாததால் தனியார் துறையினர் கல்வி நிறுவனங்களை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்பதும் தரமான கல்வி கொடுக்கின்றோம் என்ற பெயரில் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் அந்த பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நடத்த வேண்டிய மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களை தனியார்கள் நடத்தி வருகின்றனர் என்றும் தனியார் நடத்த வேண்ட்ய மது கடைகளை அரசு நடத்தி வருகிறது என்றும் இதுதானே இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள சமூக அவலமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நம்மூரில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கல்விக்கான கட்டணம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் உலகின் மிகச்சிறந்த ஒரு சில பள்ளிகளில் கோடிக்கணக்கில் ஆண்டு கட்டணமாக பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அந்த வகையில் உலகில் மிகவும் காஸ்ட்லியான கட்டணம் உள்ள பள்ளிகள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
கல்லூரி ஆல்பின் பியூ சோலைல்
சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள இப்பள்ளியில் சுமார் 300 குழந்தைகள் படிக்கின்றனர். 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் தங்கள் படிப்பிற்காக இப்பள்ளிக்கு வருகிறார்கள். இங்கு வருடத்திற்கு ஒரு மாணவருக்கு CHf 150,000 கட்டணம் ஆகும். இது இந்திய மதிப்பில் மாற்றினால் சுமார் ரூ.1.34 கோடி என்பது குறிப்பிடத்தக்கது
லு ரோசி நிறுவனம்
இந்த பள்ளியும் சுவிட்சர்லாந்தில் உள்ளது. சுமார் 65 நாடுகளில் இருந்து 420-430 குழந்தைகள் இங்கு படிக்க வருகிறார்கள். இந்தப் பள்ளியின் ஆண்டுக் கட்டணம் CHf 1,25,000, அதாவது ரூ. 1.1 கோடி ஆகும்.
ஹர்ட்வுட் ஹவுஸ் பள்ளி, சர்ரே, பிரிட்டன்
இந்த பள்ளி பிரிட்டனில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் சேர்க்கை நேர்காணல் மற்றும் குறிப்பு அடிப்படையில் நடைபெறுகிறது. இந்தப் பள்ளியின் ஆண்டுக் கட்டணம் GBP 25,284, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகும்.
திங்க் குளோபல் பள்ளி
இந்தப் பள்ளி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. இந்தப் பள்ளியின் ஆண்டுக் கட்டணம் USD 94,050, அதாவது இந்திய மதிப்பில் ரூ.77,00,000. இது ஒரு பயணப் பள்ளி என்பதும், இந்த பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 4 நாடுகளில் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.