ஆன்மீகம்
மே 1 முதல் 15 வரை இருவார ராசி பலன் – 12 ராசிகளுக்கும் ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

மே 1 முதல் 15 வரை 12 ராசிகளுக்கான ஜோதிட பலன்கள் (ஜோதிடர் ஷெல்வி கணிப்பு):
மேஷம் (Aries):
திட்டமிட்டு செயல்பட்டால் இக்காலம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, இல்லத்தில் சந்தோஷம் காணலாம். திட்டமின்றி முதலீடு தவிர்க்கவும். சுகாதாரத்தில் சிறு பிரச்சனைகள் உண்டாகலாம். முருகனைக் கும்பிடுங்கள்.
ரிஷபம் (Taurus):
சிலவித காலதாமதம் இருந்தாலும் சுபநிகழ்வுகள் நடைபெறும். பணியில் நிதானமாக செயல்பட வேண்டும். வீண் கடனைத் தவிர்க்கவும். மகாலட்சுமியைக் கும்பிடுங்கள்.
மிதுனம் (Gemini):
பணிச்சூழலில் நிதானமாக இருங்கள். மேலதிகாரிகளிடம் வாதம் வேண்டாம். குடும்ப அமைதி பெறும். சுகாதாரத்தில் அலர்ஜி, நரம்பு பிரச்னைகள் வரலாம். பெருமாளை வணங்குங்கள்.
கடகம் (Cancer):
திட்டமிட்டால் பதவி உயர்வு, மாற்றம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்கு தீர்வு கிடைக்கும். நரசிம்மரைக் கும்பிடுங்கள்.
சிம்மம் (Leo):
பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. கலைஞர்கள் சோம்பலை தவிர்க்கவும். இஷ்ட தேவதையை வணங்குங்கள்.
கன்னி (Virgo):
புதிய பொறுப்புகள், வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, வருமானத்தில் உயர்வு. பைரவரைக் கும்பிடுங்கள்.
துலாம் (Libra):
அழகான வார்த்தைகளால் வெற்றி பெறலாம். பணியில் திறமை பேசும். கலைஞர்களுக்கு வாய்ப்பு. சிவனைச் சரணடையுங்கள்.
விருச்சிகம் (Scorpio):
தன்னம்பிக்கையுடன் செயல்படலாம். குடும்பம் நிம்மதியாகும். சுப செலவுகள் கூடும். ஷண்முகனைக் கும்பிடுங்கள்.
தனுசு (Sagittarius):
தாமதங்கள் இருந்தாலும் வெற்றிக்கு வழிவகையும். தொழிலில் அலட்சியம் வேண்டாம். அரங்கனைத் துதியுங்கள்.
மகரம் (Capricorn):
பதவி உயர்வு, சொத்து வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப அமைதி சிறப்பாக அமையும். துர்க்கையைக் கும்பிடுங்கள்.
கும்பம் (Aquarius):
நீண்ட காலக் காத்திருப்புகளுக்கு முடிவும், வளர்ச்சியும் கிடைக்கும். அனுமனைக் கும்பிடுங்கள்.
மீனம் (Pisces):
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லவை நடக்கும். சுதர்சனரைக் கும்பிடுங்கள்.

















