சினிமா
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘மாவீரன்’!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
’ப்ரின்ஸ்’ திரைப்படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறர். சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட்டாக நடிக்க அதிதி ஷங்கர் படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறார். படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமம் என ப்ரீ பிசினஸ் கிட்டத்தட்ட 80 கோடிக்கும் மேல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. படத்தில் இருந்து ‘சீன் ஆ சீன் ஆ’ என்ற முதல் சிங்கிளும் வெளியாகியுள்ளது.
கடந்த 20 நாட்களாக எண்ணூரில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இப்போது படக்குழு பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்க இருக்கிறது. பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்தப் படம் வருகிற ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘மாவீரன்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.