சினிமா செய்திகள்
’மாஸ்டர்’ ‘வலிமை’ பிரபலங்கள் திடீர் சந்திப்பு: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ‘வலிமை’ படங்களின் பிரபலங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நிகழ்வின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் இயக்குனர் வினோத் ஆகிய இருவரும் பல ஆண்டு கால நண்பர்கள். இவர்கள் இருவரும் தங்களது படங்களில் பிசியாக இருந்ததால் கடந்த சில மாதங்களாக நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடிந்து விட்ட வினோத்தை தற்போது நேரில் சந்தித்து உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது சகோதரர் வினோத் அவர்களை சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எச்.வினோத் உடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் மற்றும் விஜய் பட இயக்குனர்கள் நேருக்கு நேர் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Good time spent with #Vinoth anna after years! #Brotherhood???? pic.twitter.com/ovcKugV0Hu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2021


















