Connect with us

ஆன்மீகம்

50 வருடங்களுக்கு பின் பூச நட்சத்திரத்தில் செவ்வாய்: 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறக்கிறது!

Published

on

50 ஆண்டுகளுக்கு பிறகு பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால் மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பொற்காலம் பிறக்க உள்ளது. சனி பகவானின் நட்சத்திரமாக கருதப்படும் பூசவில், செவ்வாய் பகவான் ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 6.32 மணிக்கு பெயர்ச்சி அடைவார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

இந்த பெயர்ச்சியின் விளைவாக குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரகாசமான மாற்றங்கள் ஏற்படும். அனைத்து காரியங்களிலும் வெற்றி மட்டுமே உண்டாகும். பணியிலும், வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். இந்த ராசிக்காரர்கள் நினைத்ததெல்லாம் எளிதில் நிறைவேறும்.

கடகம்:
பூச நட்சத்திரத்தில் செவ்வாய் நுழைவதால் கடக ராசிக்காரர்கள் பெரிய வியாபார வாய்ப்புகளைப் பெறுவர். பொருளாதார முன்னேற்றம் உறுதி. உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

கன்னி:
இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வும் உறுதி. பொருளாதாரத்தில் வலிமை உண்டாகும். நீங்கள் புது தொழில் தொடங்கி முதல் நாளிலிருந்தே லாபம் பெறலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வியாபார லாபம் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வருமானம் செலவை விட அதிகமாக இருக்கும். புதிய வீடு அல்லது கார் வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
dr68 seo power :.