சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்.. என்ன காரணம்?

2022-ம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப் பெரிய வசூலைச் செய்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இதுவரையில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வசூல் செய்துள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் போதே இரண்டு பாகத்திற்கும் சேர்த்துப் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்து படம் ரிலீஸ் ஆனது.
இப்போது முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம்.
இந்த படப்பிடிப்பு 8 முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் என்றும், இதனால் படம் வெளியாவதில் எந்த தாமதமும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பாண்டிய ஆபத்துதவிகள் சபதம் எடுக்கும் போது கையில் கற்பூரம் ஏந்தும் காட்சி கிராப்பிக்ஸில் வடிவமைக்கப்பட்டு இருந்தது பெரும் அளவில் விமர்சிக்கப்பட்டது.
இப்போது அது போன்ற சில கிராப்பிக்ஸ் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்சி படைத்த சில காட்சிகள் மிண்டும் எடுக்கப்படலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.