ஆன்மீகம்
மாளவ்ய ராஜயோகம் 2025: சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாவை?

ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்கள் தங்கள் சஞ்சாரங்களின் மூலம் சில நேரங்களில் சுப யோகங்களையும், சில நேரங்களில் அசுப யோகங்களையும் உருவாக்குகின்றன. அந்த வகையில், அழகு, செல்வம், ஆடம்பரம் மற்றும் காதலின் காரணியாகக் கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நவம்பர் 1, 2025 அன்று நுழையவுள்ளார். இதனால் மாளவ்ய ராஜயோகம் உருவாகி, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருகப் போகின்றன.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் லக்னத்தில் அமர்வதால் ஆளுமை, கவர்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு இனிமையான குடும்ப வாழ்க்கை அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கும். வேலைப்புரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 11வது வீட்டில் சுக்கிரன் அமர்வதால் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீட்டில் ஈடுபட்டவர்கள் லாபம் அடைவார்கள். தொழில் முனைவோர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் சுக்கிரன் அமர்வதால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உழைப்புக்கான பாராட்டு கிடைக்கும். உறவினர்களுடனான உறவுகள் நல்ல முறையில் அமையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகும்.
சுக்கிரனால் உருவாகும் இந்த மாளவ்ய ராஜயோகம் 2025, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியும், அதிர்ஷ்டமும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
