Connect with us

இந்தியா

ஒரு வெங்காயத்தின் எடை 750 கிராம்.. உரமின்றி விளைச்சல் செய்து விவசாயி சாதனை..!

Published

on

சாதாரணமாக ஒரு வெங்காயம் 50 கிராமில் இருந்து 100 கிராம் வரைஇருக்கும். அதிசயமாக ஏதாவது ஒரு வெங்காயம் 500 கிராம் வரை இருந்ததாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு வெங்காயம் 750 கிராம் என்ற வகையில் பயிரிட்டு உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான மகாஹாராஷ்டிராவின் நாசிக்சந்தையில் கிலோ ரெண்டுக்கு மட்டுமே வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் போராட்டம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில்வெங்காயத்தின் விலை ஒரு பக்கம் வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவை சேர்ந்த 42 வயது விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் 750 கிராம் எடை உள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கரும்பு பயிரிட்டபோது ஊடுபயிராக வெங்காயத்தை பயிரிட்டதாகவும் அந்த வெங்காய பயிருக்கு என தனியாக உரம் ஏதும் விடவில்லை என்றும் கரும்புக்கு விடப்பட்ட உரம் தான் அதற்கும் இடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெங்காயத்தின் அசாதாரண வளர்ச்சிக்கு ஊடுபயிரில் வெங்காயம் விளைவித்தது தான் தான் காரணம் என்று இது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் இந்த அளவு பெரியதாக வளர்வதற்கு ஊட்டச்சத்து வழங்கல் அல்லது மரபணு மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றும் இது குறித்து சர்வதேச வேளாண் பயிர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் குறைவாக பயிரிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊடுபயிராக பயிரிட்டேன் என்றும் ஆனால் ஒரு வெங்காயத்தின் எடை 750 கிராம் வரும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என்றும் அந்த விவசாயி தெரிவித்துள்ளார். மேலும் வெங்காயத்தின் விலை அதிகமான உடன் இது போன்ற அதிக வெங்காயத்தை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விவசாய அதிகாரிகள் அவரது நிலத்தை ஆய்வு செய்து வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்துஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே ஒரு வெங்காயம் 750 கிராம் என்பது அந்த பகுதி மக்களை மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?