செய்திகள்
மொபைல் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை: சிம் மோசடி தடுக்கும் வழிகள் மற்றும் சஞ்சார் சாதியின் பயன்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
நாடுதொறும் ஆயிரக்கணக்கான மொபைல் போன்கள் திருடப்படுவதும் அல்லது தொலைந்து போகும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இதனால், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி பாதுகாப்பு மிக முக்கியமாக மாறியுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிமுகப்படுத்திய ‘சஞ்சார் சாதி’ (Sanchar Sathi) மற்றும் CEIR போர்ட்டல் உதவியுடன் உங்கள் மொபைல், சிம் மற்றும் தரவை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
மொபைல் தொலைந்தவுடன் உடனே செய்ய வேண்டியவை:
காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்:
IMEI எண்ணுடன் புகார் அளித்து FIR எடுத்து வையுங்கள்.சிம் கார்டை முடக்கவும்:
உங்கள் மொபைல் சேவை வழங்குநரிடம் தொடர்பு கொண்டு சிம் முடக்கவும். புதிய சிம் எடுத்து வங்கிக்கணக்கு, UPI போன்றவற்றை அதில் மாற்றவும்.CEIR போர்ட்டல் மூலம் மொபைலை பிளாக் செய்யவும்:
👉 www.ceir.gov.in – இல் IMEI மற்றும் புகாரின் நகலை பதிவேற்றிய பின், மொபைல் பிளாக் செய்யலாம்.Google Find My Device / Apple Find My iPhone:
உங்கள் மொபைலை ட்ராக் செய்யவும், டேட்டா அழிக்கவும் பயன்படும்.வங்கி கணக்குகள், UPI PIN, ஆன்லைன் பாஸ்வேர்டுகளை மாற்றவும்.
சிம் கார்டு மோசடிகள் எப்படி நடக்கிறது?
SIM Swap Scam: உங்கள் தகவல்களை திரட்டி, புதிய சிம் எடுத்து OTP மூலமாக வங்கி பணம் திருடப்படலாம்.
பயன்படுத்தாத சிம் அபாயம்: 90 நாட்கள் பாவனை இல்லாத சிம் மீண்டும் வழங்கப்படலாம், இதில் தரவு மீண்டும் பயன்படுத்தப்பட வாய்ப்பு.
போலி ஆவணங்கள் மூலம் சிம் வாங்கும் மோசடி: இதனால் OTP மூலமாக வங்கிக் கணக்குகள் காலியாக்கப்படுகின்றன.
📌 மோசடிகளைத் தவிர்க்க:
சிம் முடக்க Bio-Metric சரிபார்ப்பு கட்டாயம்
KYM, ASTR சேவைகள் மூலம் உங்கள் பெயரில் உள்ள சிம் எண்ணிக்கையை அறியவும்.
தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்
OTP எவருடனும் பகிராதீர்கள்.
📌 சஞ்சார் சாதி செயலியின் பயன்கள்:
உங்கள் பெயரில் உள்ள அனைத்து மொபைல் எண்களையும் அறிய
தெரியாமல் பதிவு செய்யப்பட்ட மோசடி எண்களை அடையாளம் காண
மொபைலை CEIR மூலம் பிளாக் செய்ய
போலி அழைப்புகள், மோசடிகளை புகாரளிக்க.
📌 முக்கிய ஆலோசனைகள்:
IMEI எண், மொபைல் பில் நகல் பாதுகாக்கவும்
நகல் ஆவணங்கள் வைத்திருங்கள்
மொபைல் எண்ணில் சேவை தடைப்பட்டால் உடனே சரிபார்க்கவும்
உங்கள் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
