Connect with us

ஆன்மீகம்

துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் 2026 | வேலை, பணம், ஆரோக்கியம் – முழு ராசி பலன்!

Published

on

2026ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பெருமை, முன்னேற்றம் மற்றும் உயர்வுகளைத் தரும் ஆண்டாக அமைய உள்ளது. வருடத் தொடக்கத்தில் ஏற்படும் குரு பெயர்ச்சி, ராகு–கேது மாற்றங்கள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில், பல துறைகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இந்த ஆண்டில் பொறுமை மற்றும் கவனத்துடன் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் தொடர்ச்சியான முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைகளை மதித்து பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் உறுதியாக கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்பும் உள்ளது.

அயல் நாட்டுப் பயணம் தடைப்பட்டாலும் மனம் தளர வேண்டாம். அது உங்களுக்கே நல்லதாக முடியும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். வாரிசுகளுடன் மனதார உரையாடுவதன் மூலம் உறவு வலுப்படும். உறவினர்கள் இடையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது நல்லது.

முன்னோர் கடன்களை முடிந்த வரையில் நிறைவேற்றுவது சிறந்தது. பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகங்கள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். யாரிடமும் கடன் வாங்குதல் அல்லது கடன் வழங்குதல் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது.

தொழிலில் அபார வளர்ச்சி கிடைக்கும். ஆனால் அந்த வளர்ச்சி தொடர்ந்து நிலைக்க கடின உழைப்பு அவசியம். தேவையற்ற வங்கிக் கடன்களை தவிர்ப்பது அறிவுடைமை. அரசியலில் இருப்பவர்கள் முகஸ்துதி செய்யும் நபர்களை விலக்குவது நல்லது.

அரசுப் பணியில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். பணத்தை கையாளும் துறைகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் தொடர்ந்து புதிய வாய்ப்புகளைப் பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் படைப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.

மாணவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். இரவு நேர வெளிப்பயணங்களைத் தவிர்ப்பது சிறந்தது. நரம்பு, எலும்பு, மூட்டு, முதுகு வலி, சரும அலர்ஜி போன்ற பிரச்னைகள் வரக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வாராகி அம்மன் வழிபாடு செய்யுதல் உங்கள் வாழ்வில் சகல நன்மைகளையும் சேர்க்கும்.

Translate »
Businesses contact booking.