Connect with us

ஆன்மீகம்

லட்சுமி நாராயண யோகம் 2025: தீபாவளிக்குப் பிறகு கோடிகளுக்கு வழிவிடும் 3 ராசிகள்!

Published

on

ஜோதிட ரீதியில் முக்கியமான லட்சுமி நாராயண யோகம் தீபாவளிக்குப் பிறகு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் தொழில் முன்னேற்றத்தை வழங்கவுள்ளது. வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மற்றும் புதன் பகவான்கள் விருச்சக ராசியில் இணைந்திருப்பதால் இந்த லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.

புதன்-சுக்கிரன் இணைவு

நவகிரகங்களில் புதன் பகவான் பேச்சுத்திறன், புத்திசாலித்தனம், வணிகம், படிப்பு ஆகியவற்றின் காரகராகவும், சுக்கிரன் பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, பொன், பொருள், வசதி ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு ஜோதிட ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விருச்சிகம் ராசி

  • லட்சுமி நாராயண யோகம் முதல் வீட்டில் உருவாகுகிறது.

  • ஆளுமை, தன்னம்பிக்கை மேம்படும்.

  • தொழிலில் புதிய வாய்ப்புகள் கைகொள்ளும்.

  • நீண்டகாலமாக நிலவி வந்த குடும்ப பிரச்சனைகள் தீரும்.

  • திருமணமானவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பர்; திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரும்.

சிம்மம் ராசி

  • லட்சுமி நாராயண யோகம் நான்காவது வீட்டில் உருவாகிறது.

  • பொன், பொருள், வசதிகள், ஆடம்பரம் அனுபவிக்கலாம்.

  • வாகனம் அல்லது புதிய சொத்து வாங்கலாம்.

  • தொழிலில் புதிய ஆர்டர்கள் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

  • குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் தீரும்; ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வருமானம் இரட்டிப்பாகும்.

மேஷம் ராசி

  • லட்சுமி நாராயண யோகம் அதிர்ஷ்ட வீட்டில் உருவாகிறது.

  • அதிர்ஷ்ட ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

  • நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் பயணங்கள் நடைபெறலாம்.

  • தொழிலில் விரைவான முன்னேற்றம் காணப்படும்.

  • அரசு வேலைகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

  • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்; நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்.

Translate »
bolsas con logotipo impreso.