கிரிக்கெட்
2வது ஓவரிலேயே விக்கெட் விழுந்தும் அதிரடி காட்டும் மும்பை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து மும்பை அணி சற்றுமுன் பேட்டிங் செய்ய களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியின் 2-வது ஓவரிலேயே மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிகாக் அவுட்டானார். அவரது விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் களம் இறங்கிய உடனே அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். 2-வது ஓவரிலேயே விக்கெட் விழுந்தும் அசராமல் மும்பை அணியினர் தங்கள் பாணியில் ரன்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் வரை மும்பை அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மும்பை: ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ராகுல் சஹார், மேக்ரோ ஜேன்சென், டிரெண்ட் போல்ட், பும்ரா
கொல்கத்தா அணி: கில், ரானா, ராகுல் திரிபாதி, ஆண்ட்ரே ரஸல், மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், கம்மின்ஸ், ப்ரசித் கிருஷ்ணா, ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி.

















