சினிமா
அஜித்தின் துணிவு படத்தை பார்த்த ஷாலினி; ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!
Published
3 weeks agoon
By
Saranya
கணவரின் துணிவு படத்தை பார்த்து விட்டு செம ஹேப்பியாக மனைவி ஷாலினி அஜித் தியேட்டரை விட்டு வெளியேறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள பேங்க் ஹெய்ஸ்ட் திரைப்படம் தான் துணிவு. வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் அஜித் அதை எந்த காரணத்திற்காக செய்கிறார் என்பது தான் படத்தின் கதை என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.
சிட்டிசன் படத்தை போலவே ஒரு குறிப்பிட்ட கொடுமையை எதிர்த்து இந்த படத்தில் நடிகர் அஜித் போராடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கப் போகிறாரா அஜித் என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது.
விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் விவசாயிகளின் கடனை ரத்து செய்வதற்கான கோரிக்கையுடன் இந்த வங்கி கொள்ளை நடக்கலாம் என ஏகப்பட்ட கதைகள் துணிவு படம் குறித்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை சென்னையின் உள்ள 4 ஃப்ரேம்ஸ் எனும் ஸ்டூடியோவில் உள்ள திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவை நடிகை ஷாலினி அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் வந்து பார்த்தார்.
படத்தை பார்த்து விட்டு செம ஹேப்பியாக வந்த ஷாலினி அஜித்துடன் அங்கே கூடிய ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சுரேஷ் சந்திரா உடனமும் அஜித் ரசிகர்கள் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டனர். படம் நல்லா வந்திருக்கு என்றும் பிளாக்பஸ்டர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
You may like
-
விக்னேஷ் சிவனை விரட்டி விட்ட அஜித்; இனிமே நம்பர் ஒன் ஆவது தான் லட்சியமா?
-
துணிவு ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் தெரியுமா?
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
அஜித்தை சந்திக்கவே முடியலை! 8 வருஷம் வெயிட் பண்ணி வெறுத்துட்டேன்; பிரேமம் இயக்குநர் புலம்பல்!
-
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
-
துணிவு ஹீரோயின் மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? ரசிகர்கள் ஷாக்!