இந்தியா
சச்சின் டுவீட் போட பிசிசிஐ நிர்ப்பந்தமா? கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள்!

கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் வட மாநில விவசாயிகள் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் திடீரென நேற்று உலகின் கவனத்தை கவர்ந்தது என்பது தெரிந்ததே
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா அவர்கள் தனது டுவிட்டரில் இந்த போராட்டம் குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். அந்த ட்வீட்டில் நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசாமல் இருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் ரிஹானாவின் டுவீட்டிற்கு ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். நேற்று சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது டுவிட்டரில் வெளிநாட்டவர்கள் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் எந்த காரணத்தை முன்னிட்டும் இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் ட்வீட் செய்திருந்தார்
Dear @BCCI please stop forcing cricketers from tweeting propaganda. It’s very crude.
— Karti P Chidambaram (@KartiPC) February 3, 2021
இந்த ட்விட்டிற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் கூறியபோது ’கிரிக்கெட் வீரர்களை ட்விட்டர் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் என பிசிசிஐயை தான் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
கார்த்திக் சிதம்பரத்தின் இந்த ட்விட்டின் காரணமாக சச்சின் டெண்டுல்கர் டுவிட் போட பிசிசிஐ நிர்ப்பந்தம் செய்ததா? என்ற கேள்வி எழுந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் ரிஹானாவின் டுவிட்டிற்கு பின்னரே டுவிட் செய்துள்ளதால் ஒருவேளை பிசிசிஐ நிர்ப்பந்தம் செய்து இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரின் மனதில் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐக்கு உள்ளது என்பதும் கார்த்திக் சிதம்பரம் அவர்களின் இந்த சந்தேகத்திற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது




















