சினிமா செய்திகள்
விஜய்யை அடுத்து அஜித்துடன் மோத முடிவு செய்த கார்த்தி: இதுதான் திட்டமா?
விஜய் அடுத்து அஜித்துடன் நடிகர் கார்த்தி மோத முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’பிகில்’ படத்துடன் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பதும் விஜய் படத்தை மீறி கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் விஜய்யை அடுத்து அஜீத் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்துடன் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் மோதவுள்ளது. ‘அஜித் 61’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் தான் ‘சர்தார்’ ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
வித்தியாசமான இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.