சினிமா செய்திகள்
ஆலியா பாட்டை மூடிக் கொண்டு போக சொன்ன கங்கனா ரனாவத்தின் தங்கை!

ஆலியா பாட்டின் கலன்க் திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனால், கடுப்பான கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி, மீண்டும் பாலிவுட்டில் நெபோடிசம் தலை தூக்கி ஆடுகிறது என்ற சர்ச்சையை கிளறியுள்ளார்.
பாலிவுட் இயக்குநர் முகேஷ் பாட்டின் மகள் தான் ஆலியா பாட். வாரிசு அரசியல் போல, பெரிய இயக்குநரின் மகள் வாரிசு நடிகையாக பாலிவுட்டில் வந்துவிட்டார் என முன்னதாக நெபோடிஸம் சர்ச்சையை கங்கனா ரனாவத் கிளறினார்.
அதற்கு பாலிவுட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், கங்கனா ரனாவத் இயக்கி நடித்த மணிகர்ணிகா திரைப்படத்திற்கு பாலிவுட் ஆதரவு கொடுக்காதததும், அந்த படத்தை கங்கனா இயக்கியதாக போட்டுக் கொண்டது பெரும் மோசடி என அந்த படத்தை இயக்கிய கிரிஷ் கூறியது கங்கனாவுக்கு மேலும் பாலிவுட்டில் கெட்ட பெயரை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தான் ஆலியா பாட் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளறியுள்ளார் கங்கனாவுக்காக சமூக வலைதளத்தில் போராடும் அவரது தங்கை ரங்கோலி. உங்களின் கதை பற்றி ஊருக்கே தெரியும் நீங்கள் மூடிக் கொண்டு இருங்கள் ஆலியா பாட் என ட்வீட் போட்டு மீண்டும் நெபோடிச சண்டையை ஆரம்பித்துள்ளார்.





















