சினிமா செய்திகள்
கமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா?

நடிகர் மற்றும் மக்கல் நீதி மய்யம் தலைவரான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சபாஷ் நாயுடு திரைப்படத்தில் நடித்த போது காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்த அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனதால் சபாஷ் நாயுடு படம் டிராப் ஆனது.
அதன் பிறகு தற்போது அரசியலுக்கு வந்தது மட்டுமல்லாமல், இந்தியன் 2 படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் காலில் அறுவை சிகிச்சை செய்த போது டைட்டானியம் கம்பி ஒன்று வைக்கப்பட்டு இருந்ததாம்.
அதை மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்போது எடுப்பதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கமல் நோ அரசியல்; நோ சினிமா என்று ஓய்வு எடுத்து வருவதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.






