Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தகுதி இருந்தும் ரூ.1000 கிடைக்காத பெண்கள் யார்? முக்கிய அறிவிப்பு!

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் சில பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படாத வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியலில் யார் சேர்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை டிசம்பர் 12ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்ய உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த முறை தவறுதலாக விடுபட்டவர்களும், புதிதாக ரேஷன் கார்டு பெற்ற தகுதியுள்ள பெண்களும் இம்முறை திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

ஜூலை முதல் நவம்பர் வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தகுதியுள்ள பல பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். தகுதி பெற்றவர்களுக்கு டிசம்பர் 12 முதல் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

ஆனால், இங்கே ஒரு முக்கிய சிக்கல் உள்ளது. தகுதி இருந்தாலும் அரசு வழங்கிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்காத பெண்களுக்கு இந்த முறை ரூ.1000 கிடைக்காது என்று கூறப்படுகிறது.

தற்போது பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து வருகின்றனர். இம்மனுக்களை அரசு ஏற்குமா என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லை.

மேலும், மனு கொடுத்தாலே விண்ணப்பமாக கருதப்படாது என்பது தெளிவாக கூறப்படுகிறது. எனவே, இந்த மனு அளித்த பெண்களுக்கு இம்முறை திட்டத்தில் சேர வாய்ப்பு குறைவாகவே உள்ளது. குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளை கருதி மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட பரிசீலனை செய்தால் சாத்தியம் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Premium yacht charter & boat rental in turkey charteringa luxury yacht or rent a bare boat online easily with yachttogo's powerful booking system..