செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய அறிவிப்பு – இன்னும் பல பெண்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் புகழ்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தற்போது மேலும் பலருக்கு நன்மை தரும் வகையில் விரிவாக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடி தகுதி வாய்ந்த பெண்கள் மாதம்தோறும் ரூ.1000 தொகையை நேரடியாக பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தில் சேர முடியவில்லை எனக் கூறும் பல பெண்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்த பிறகு, அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
9000 புதிய முகாம்கள் அமைக்கப்படும்!
புதிதாக 9,000 முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன.
இவை மூலம் புதிய விண்ணப்பதாரர்களின் தகவல் பதிவு செய்து, அவர்களின் தகுதியை மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் புகார்கள் கூறியதுபோல், சில பகுதிகளில் இமுகாம்கள் இல்லை என்றால், அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்? – புதிய வழிகாட்டி:
🔹 வீட்டில் ஓய்வூதியம் பெறுபவர் இருந்தாலும், குடும்பத் தலைவி தகுதி பெற்றால் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
🔹 இரு பெண்கள் வீட்டில் இருந்தாலும், அரசு வேலைவோ அல்லது பிற நிதியுதவியோ இல்லாமல் இருந்தால், இருவரும் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள்.
🔹 விவாகரத்து பெற்ற பெண்கள், தனிப்பட்ட ரேஷன் கார்டு வைத்திருந்தால், திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

