செய்திகள்
ஜூலை 15 “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மகளிர் உரிமைத் தொகை மட்டுமல்ல, இந்த அரசுத் திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்களை நடத்த இருக்கிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.
முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கோடு பல நலத்திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
✅ விண்ணப்பிக்கக்கூடிய முக்கிய திட்டங்கள்:
🏡 நில உரிமை மற்றும் அடையாள மாற்றங்கள்:
பட்டா மாறுதல்
பட்டா பெயர் திருத்தம்
நில அளவீடு
இறந்தவரின் பெயர் மாற்றம் (இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்று தேவை)
📄 முக்கிய சான்றிதழ்கள்:
வாரிசுச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
OBC மற்றும் சிறுகுறு விவசாயி சான்று
கணவனால் கைவிடப்பட்ட சான்றிதழ்
தாமதமாக பிறப்பு/இறப்பு சான்றிதழ்
💰 நிதி மற்றும் உதவித் தொகைகள்:
முதியோர் உதவித் தொகை
விதவை உதவித் தொகை
திருமணமாகாத பெண்கள் உதவித் தொகை
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உதவி
முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம்
⚡ மின் மற்றும் ரேஷன் சேவைகள்:
மின்கட்டண பெயர் மாற்றம்
மின்கட்டண திருத்தம்
ரேஷன் கார்டு முகவரி மாற்றம்
👩🔧 சுயதொழில் மற்றும் வலையமைப்பு:
மகளிர் சுய உதவிக் குழு கடன்
சுயதொழில் தொடங்க கடன்
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் உதவித் திட்டங்கள் (பெட்ரோல் ஸ்கூட்டர், செயற்கைக் காலை, மூன்று சக்கர வண்டி, சுயதொழில் கடன்)
பராமரிப்பு உதவித் தொகை
🎓 கல்வி, பள்ளி மற்றும் இளைஞர் நலன்:
ஆதிதிராவிடர் நலத்துறையின் தாட்கோ கடன்
இணையவழி வீட்டுமனை பட்டா
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வேலை இல்லாத இளைஞர்களுக்கான திட்டங்கள்
🧵 கைதொழில் மற்றும் சமூக நலத் திட்டங்கள்:
கலைஞர் கைவினைத் திட்டம்
டாம்செட்கோ, டாப்செட்கோ கடனுதவி
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி உதவி
ஆதார் சேவைகள்
இந்த திட்டங்களுக்காக தேவையான ஆவணங்களுடன் முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாள ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.






















