செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது திட்டத்தின் விண்ணப்ப கடைசி தேதியாக நவம்பர் 30 என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்கள் தொடங்கவுள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த முகாம் கடலூர் சிதம்பரத்தில் துவக்கமாக நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 10,000க்கும் மேற்பட்ட இடங்களில் மாநிலம் முழுவதும் ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.
விண்ணப்ப கடைசி தேதி:
👉 நவம்பர் 30, 2025
இதனால், ஆவணங்கள் இன்னும் தயாராகாத பெண்கள் பதட்டம் இல்லாமல் அரசிடம் அவற்றை பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். அரசு பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளது.
முதல் கட்ட விரிவாக்கம்:
அரசு முதற்கட்ட பயனாளிகளுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கத் தொடங்கும். புதிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு, அவர்களுக்கும் தொகை வழங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
