சினிமா செய்திகள்
ஜூராசிக் வேர்ல்ட் டாமினேஷன்’ டிரைலர் ரிலீஸ்!

ஹாலிவுட்டில் ஏற்கனவே ஜுராசிக் பார்க், ஜுராசிக் வேர்ல்ட் உள்பட பல திரைப்படங்கள் டைனோசர் குறித்து வெளி வந்துள்ளன என்பதும் இது குறித்து வெளியான அனைத்து திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அடுத்ததாக ஜுராசிக் வேர்ல்ட் டாமினேஷன்’ என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் டைனோசர்களின் சாம்ராஜ்யம் உள்ளது என்பதும் மனித இனத்திற்கு எந்த அளவுக்கு அது அச்சுறுத்தலாக உள்ளது என்பதும் காட்சிகள் உள்ளன.
இதற்கு முன்பு வந்த டைனோசர் படங்களைவிட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களையும் குறிப்பாக குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சுவராசியமான டீசர் இதோ: