சினிமா
புஷ்பாவாக மாறும் அல்லு அர்ஜூன்…இப்படித்தான் மேக்கப் போட்டாங்களா!…மேக்கிங் வீடியோ….
Published
12 months agoon
By
ராஜேஷ்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை புஷ்பா குழுவினர் சிறப்பாக செய்தனர். ‘புஷ்பா’ படக்குழுவினர் சென்னை, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் புரமோஷன் செய்தனர்.
எனவே, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தின் பாடல்கள் யுடியூப்பில் ஹிட் அடித்தது. ‘ஊ சொல்றியா’ மற்றும் ‘ஏ சாமி’ஆகிய 2 பாடகளும் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்து ஹிட் அடித்தது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் இருந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திரையுலகினர் கணித்தனர். நினைத்தது போலவே இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
அதோடு, அனைத்து மொழி ரசிகர்களிடமும் புஷ்பா படம் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிய நிலையிலும், இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.
இந்நிலையில், அல்லு அர்ஜூன் எப்படி புஷ்பாவாக மாறுகிறார் என்கிற மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
You may like
-
ராஷ்மிகாவை அடுத்து இன்னொரு நடிகை: ‘தளபதி 66’ குறித்த மாஸ் தகவல்!
-
வெற்றி மமதையில் அல்லு அர்ஜுன்.. அபராதம் விதித்த காவல் துறையினர்!
-
விஜய்யின் ‘தளபதி 66’: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு
-
’தளபதி 66’ படத்தை ராஷ்மிகா தான் வேண்டாம் என்று சொன்னாரா? ஆச்சரிய தகவல்!
-
நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த அல்லு அர்ஜுன்: என்ன காரணம்?
-
ஓ சொல்றியா மாமா!… ரூ. 300 கோடி வசூலை தாண்டிய புஷ்பா திரைப்படம்…