தமிழ்நாடு
அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கட்சி இல்லை, எம்ஜிஆரின் கட்சி: ஜேசிடி பிரபாகர் ஆவேசம்

அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கட்சி இல்லை என்றும் அது எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றும் இன்றும் அந்த கட்சி தொண்டர்களின் கட்சியாக உள்ளது என்றும் ஜேசிடி பிரபாகர் ஆவேசமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜேசிடி பிரபகர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேச எழுந்த போது மைக்கை ஆப் செய்து விட்டனர். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டம் கண்ணியமாக நடத்தப்பட வில்லை. எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். ஈபிஎஸ் பக்கம் நிர்வாகிகளும் , ஓபிஎஸ் பக்கம் தொண்டர்களும் உள்ளனர்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் எம்ஜிஆர் இல்லை, அதிமுக அது அவர்களுடைய கட்சியும் இல்லை. தொண்டர்களின் கட்சி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட ஓபிஎஸ் அவர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தி உள்ளார்கள்.
கண்ணியக் குறைவாக நடந்து கொண்டவர்களை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தாரா? ஒற்றை தலைமை என ஏற்கனவே சொல்லித் தந்ததே பொதுக்குழுவில் நிர்வாகிகள் ஒப்பித்தனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.


















