சினிமா செய்திகள்
100 மில்லியன் வியூஸ் கடந்த ‘செல்லமா’ பாடல்; குஷியில் ‘டாக்டர்’ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படக்குழு சார்பில் முதன் முதலில் வெளியிடப்பட்ட பாடல் தான் ‘செல்லமா’.
அனிருத் இசையமைத்துப் பாடிய இந்தப் பாடல் பட்டிதொட்டியெல்லாம் வைரலானது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னர் வெளியாட இந்தப் பாடல், இன்னும் பலரது விருப்பத்துக்குரிய சாங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. துள்ளல் இசைக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் இந்தப் பாடலை எழுதி கொடுத்திருந்தார்.
தற்போது ‘சோ பேபி’ என்னும் அடுத்த சிங்கிள் பாடலையும் டாக்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. அதுவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன், இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
Another century from our Rockstar @anirudhofficial ???????? #100MForChellamma ♥️ – https://t.co/AX2NM3ITWr #DOCTORfromMarch26 #Doctor @Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @jonitamusic @SKProdOffl @KalaiArasu_ @kjr_studios @SonyMusicSouth pic.twitter.com/wwPpkJmHT8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 1, 2021
தற்போது ‘செல்லமா’ பாடல் 100 மில்லியன் பார்வகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.