சினிமா
ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் என அடுத்தடுத்த வெளியீடுகள்- மார்வெல் ரசிகர்களுக்கு தொடர் சர்ப்ரைஸ்

மார்வெல் நிறுவனம் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள், புதுப்பட அறிவிப்புகள் என இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே உள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மே 2021-ம் ஆண்டு ‘லோகி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சர்வதேச ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது.
இதேபோல், ‘தி ஃபேல்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் மார்ச் 19, 2021 அன்று வெளியாகிறது.
அதேபோல், மார்வெல் சீரிஸ் ஆக டிஸ்னி ப்ளஸ் தளத்தில் ’வாண்டா விஷன்’ சீரிஸ் ஜனவரி 15, 2021 முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனது ட்ரெய்லர் வீடியோ உங்களுக்காக: