தொழில்நுட்பம்
iPhone-ஐ அதிக விலை கொடுத்து வாங்குவதில் 4 இடத்தில் இந்தியா? எங்கு விலை குறைவு தெரியுமா?

டாய்ட்ச் வங்கி அண்மையில் நடத்திய ஆய்வில் iPhone அதிக விலை கொடுத்து வங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.
256 ஜிபி உட்புற சேமிப்பு கொண்ட iPhone XS-ஐ உலகிலேயே அதிகபட்சமாகப் பிரேசில் 1.42 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.
பிரேசிலைத் தொடர்ந்து துருக்கியில் 1.30 லட்சம் ரூபாய்க்கும், அர்ஜெண்டினாவில் 1.23 லட்சம் ரூபாய்க்கும் iPhone XS விற்பனை செய்யப்படுகிறது.
இவர்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் இந்தியர்கள் 1.14 லட்சம் ரூபாய்க்கு iPhone XS-ஐ வாங்குகின்றனர்.
மேலும் இந்த ஆய்வில் நைஜீரியாவில் தான் 256 ஜிபி உட்புற சேமிப்பு கொண்ட iPhone XS 81,850 ரூபாய் என உலகிலேயே குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது டாய்ட்ச் வங்கி ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.


















