தமிழ்நாடு
உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை: அண்ணாமலை புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்!

உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அவர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பிய நிலையில் இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என்றும் புகார்களை நீங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளது.
ஆனாலும் அண்ணாமலை மாநில தேர்தல் ஆணையத்திற்கு பதிலாக இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தானே புகார் அளிக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பில்லாமல் பதில் கூறி உள்ளதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
திமுக அரசு தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.இந்தக் காணொளி, தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்!@ECISVEEP தன் கண்களை மூடிக் கொள்ளாமல் நாளையாவது விழிப்புடன் இருப்பார்களா?
— K.Annamalai (@annamalai_k) February 21, 2022


















