Connect with us

கிரிக்கெட்

மானம் காத்த அக்சர் பட்டேல்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா! 2-வது டெஸ்டில் வெல்லப்போவது யார்?

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர் அக்சர் பட்டேல், அஷ்வின் ஜோடி.

#image_title

முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 81 ரன்கள் விளாசினார். இந்தியா தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 46 ரன்களில் இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து 53, 54, 66 ஆகிய ரன்களில் முறையே அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்தியா 66/4 என்ற நிலையில் தடுமாறியது.

#image_title

இதனையடுத்து விராட் கோலி, ஜடேஜா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இந்த ஜோடியை 125 ரன்கள் எடுத்திருந்த போது பிரித்தார் ஆஸ்திரேலிய வீரர். இதனையடுத்து மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்தியா. இந்நிலையில் அக்சர் பட்டேல், அஷ்வின் ஜோடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. குறிப்பாக அக்சர் பட்டேல் 74 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். அஷ்வின் 37 ரன்கள் எடுத்தார். முன்னதாக விராட் கோலி 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லையன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் முழுமையாக மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. நாளைய தினம் ஆதிக்கம் செலுத்த உள்ள அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?