உலகம்
எச்-1பி விசா பயன்படுத்துவதில் இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன? அமெரிக்கா அறிக்கை!

வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணிபுரிய அனுமதி அளிக்கக் கூடிய முறையே எச்-1பி விசா ஆகும். அமெரிக்க அதிபராக டிரம்ப் தலைமை பொறுப்பினை ஏற்ற பிறகு அதில் பல விதமான திருத்தங்களைச் செய்ய முயன்று வருகிறார்.
இதில் அதிகளவில் இந்தியர்கள் பாதிப்படை வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் 2018-ம் ஆண்டின் கணக்கு படி எச்-1பி விசா கீழ் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 74 சதவீதத்தினைப் பிடித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்காவில் 4,19,637 வெளிநாட்டவர்கள் எச்-1பி விசா முறை கீழ் பணிபுரிந்து வரும் நிலையில் அக்டோபர் 5-ம் தேதி வரையிலான கணக்கின் படி 74 சதவீதம் அதாவது 3,09,396 நபர்கள் இந்தியர்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் 20.4 சதவீதத்தினர் என 63,220 நபர்கள் இந்திய பெண்கள் ஆவார்கள்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக 47,172 சீனர்கள் எச்-1பி விசா வழிமுறை கீழ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.



















