செய்திகள்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 1850 பணியிடங்கள் – 10ம் வகுப்பு/ஐடிஐ தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (Heavy Vehicles Factory – HVF), தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை நியமிக்க 1850 காலிப்பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை 1961ல் தொடங்கப்பட்டு, அர்ஜுன், டி-90 பீஷ்மா மற்றும் டி-72 அஜேயா போன்ற முக்கிய ராணுவ போர்வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
காலிப்பணியிட விவரம்:
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Fitter | 835 |
| Machinist | 451 |
| Electrician | 208 |
| Welder | 204 |
| Operator Material Handling | 60 |
| Painter | 24 |
| Rigger | 36 |
| Blacksmith | 17 |
| Electronics Mechanic | 7 |
| மொத்தம் | 1850 |
கல்வித் தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது I.T.I. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தது: 18 வயது
அதிகபட்சம்: 35 வயது (அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு)
ஊதியம்:
மாதம் ₹21,000 (தற்காலிக அடிப்படையில்)
பணிக்காலம்: 1 வருடம், மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது
தேர்வு முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
இணையதள முகவரி: https://avnl.co.in
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவுக்கு: ₹300
பெண்கள் / எஸ்சி / எஸ்டி – கட்டணம் கிடையாது
கடைசி தேதி:
19.07.2025 (விரைவில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்)
























