Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.36,800 ஊதியத்தில் அறநிலைத்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – HRCE 2025!

Published

on

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறநிலைத்துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான தகுதிகள் மற்றும் வேட்புமிக்கவர்கள் செய்ய வேண்டிய செயல்முறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பணியிட விவரங்கள்:

  • மேளக்குழு (1 இடம்): இசை பயிற்சி சான்றிதழ் அவசியம். ஊதியம்: ரூ.15,300 – 48,700

  • பரிசாரகர் (1 இடம்): பிரசாதம் தயாரிக்கும் மற்றும் விநியோகம் செய்யும் திறன் வேண்டும். ஊதியம்: ரூ.13,200 – 41,800

  • அலுவலக உதவியாளர் (1 இடம்): குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி. ஊதியம்: ரூ.12,600 – 39,900

  • அத்யாபகம் (1 இடம்): ஆகம/வேத பாடசாலையில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ் அவசியம். ஊதியம்: ரூ.11,600 – 36,800

  • பகல் காவலர் (4 இடங்கள்), இரவு காவலர் (2 இடங்கள்), திருவலகு (3 இடங்கள்): தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.10,000 – 36,800

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நேர்காணல் மூலம் நடக்கும். எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பம் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கூடிய ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் ஒட்டியுள்ள சுயவிலாச ஒப்புகை அட்டையுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்,
எண்.6, எம்.என்.பி. கோயில் தெரு,
எழும்பூர், சென்னை – 600008.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025 மாலை 5:45 மணிக்குள்

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம்: https://hrce.tn.gov.in/

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.