வணிகம்
EPFO-வில் KYC அப்டேட் செய்வது எப்படி? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்!

EPFO-வில் உங்கள் KYC விவரங்களை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம்! முழுமையான வழிகாட்டி இதோ
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் உறுப்பினர்களிடம் e-KYC விவரங்களை அப்டேட் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. இது ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்கும், கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கியமாகும்.
நீங்கள் ஒரு EPFO கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், KYC அப்டேட் செய்யப்படாவிட்டால், PF பணத்தை பெறுவது, மாற்றுவது, அல்லது நிலுவையிலுள்ள தொகையை கிளைம் செய்வது முடியாது.
EPFO-வில் KYC அப்டேட் செய்யும் முறைகள்:
👉 https://www.epfindia.gov.in இல் EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
👉 “For Employees” பகுதியில் சென்று, உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாகின் செய்யவும்.
👉 “Manage” > “KYC” பகுதியில் சென்று, அப்டேட் செய்ய வேண்டிய டாக்குமெண்ட்களை தேர்வு செய்யவும்.
👉 ஆதார், பான், வங்கி கணக்கு விவரங்கள், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை சேர்க்கலாம்.
👉 தேவையான விவரங்களை பூர்த்தி செய்து “Save” செய்யவும்.
👉 உங்கள் முதலாளி அப்ப்ரூவ் செய்தவுடன் “Digitally Approved KYC” என ஸ்டேட்டஸ் மாற்றப்படும்.
👉 அனைத்தும் முடிந்ததும், உங்கள் மின்னஞ்சலுக்கு உறுதிப்பத்திரம் அனுப்பப்படும்.
KYC அப்டேட் ஏன் முக்கியம்?
✅ PF பணத்தை எடுப்பதில் தாமதம் ஏற்படாது.
✅ SMS, இமெயில் வழியாக PF கணக்கு அப்டேட்கள் கிடைக்கும்.
✅ PAN அப்டேட் இல்லையெனில், TDS வீதம் 34.608% ஆக அதிகரிக்கும்.
✅ நிதி மேலாண்மை பாதுகாப்பாகும்.





