பர்சனல் பைனான்ஸ்
சவரனுக்கு ரூ.400 தள்ளுபடி விலையில் தங்கம் வாங்கலாம்.. எங்கு? எப்படி?

2022-2023 ஆண்டுக்கான கடைசி சவரன் தங்கம் பத்திரம் திட்டத்திற்கான கடைசி வெளியிடு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பத்திரம் வடிவில் தங்கம் வாங்கினால் சவரனுக்கு 400 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.
விலை
ஒரு கிராம் சவரன் தங்கம் பத்திரத்தின் விலை 5,409 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 19-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரையில் மட்டுமே வாங்க முடியும்.
தள்ளுபடி விலையில் தங்கம் வாங்குவது எப்படி?
ஆன்லைன் மூலமாகத் தங்கம் பத்திரத்தை வாங்கினால் அரசு நிர்ணயித்துள்ள 5409 ரூபாயிலிருந்து 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஆன்லைன் மூலம் சவரன் தங்கம் பத்திரத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்கும் போது 5,359 ரூபாய்க்கு வாங்கலாம்.
எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?
குறைந்தது ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை சவரன் தங்கம் பத்திரத்தை வாங்க முடியும். இதுவே இந்து கூட்டுக் குடும்பம் எனில் 20 கிலோ வரை சவரன் தங்கம் பத்திரத்தை வாங்க முடியும்.
என்ன பயன்?
ஆபரணத் தங்கமாக வாங்கும் போது அதை வீட்டில் வைத்து இருந்தாலும் எந்த பயனும் இருக்காது. ஆனால் சவரன் தங்கம் பத்திரத்தை வாங்கும் போது அதற்கு ஒவ்வொரு ஆண்டும் 2.50 சதவிகிதம் வட்டி விகித லாபம் கிடைக்கும். இந்த வட்டித் தொகை 6 மாதத்திற்கு ஒரு முறை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
பத்திர எவ்வளவு நாட்களுக்குச் செல்லுபடியாகும்?
சவரன் தங்கம் பத்திரத்தில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும். இடையில் வெளியேற விரும்பினால் 5, 6 அல்லது 7-ம் ஆண்டுகளில் இடையில் வெளியேற முடியும். முதலீட்டைத் திரும்பப் பெறும் போது அன்றையே தேதிக்குத் தங்கம் விலை என்னவோ அதற்கு நிகரான தொகை திரும்பக் கிடைக்கும்.
அடைமானம் வைக்க முடியுமா?
ஆபரணத் தங்கம் வாங்கும் போது எப்படி அடைமானம் வைக்க முடியுமோ, அதே போன்று தங்கம் பத்திரத்தையும் வங்கிகளில் அடைமானம் வைத்து பணம் பெற முடியும்.
ஆபரணத் தங்கத்தை விட ஏன் விலை அதிகமாக இருக்கிறது?
ஆபரணத் தங்கம் 22 காரட் மதிப்பீட்டில் இருக்கும். ஆனால் சவரன் தங்கம் பத்திரம் 24 காரட் மதிப்பீட்டில் இருக்கும். எனவே விலை அதற்கு ஏற்றார் போல இருக்கும்.
எங்கு வாங்க முடியும்?
பங்குச்சந்தை, வங்கிகளில் இந்த சவரன் தங்கம் பத்திரத்தை வாங்க முடியும். பத்திர வடிவம் என்பதால் தொலைந்தாலும் அதனைத் திரும்பப் பெற இயலும். திருட்டு பயமும் இருக்காது.