Connect with us

தமிழ்நாடு

தேர்தலில் வென்றால் ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எதற்காக..?- மய்யம் விளக்கம்

Published

on

Kamal Haasan - Maiam

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தங்கள் கட்சி வென்றால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளதாவது, ‘பெண்கள் முன்னேற்றம்: பாரதியாரின் ‘புதுமைப் பெண்’ கனவை நிறைவேற்ற அனைத்து வித நடவடிக்கைகளையும் மக்கள் நீதி மய்யம் எடுக்கும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்குதல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர அதிக கவனம் செலுத்தப்படும். சம வாய்ப்பு வழங்குவதன் மூலம் பெண்கள், மக்கள் நீதி மய்யம் அரசுக்குக் கீழ் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிவார்கள்.

அதேபோல இல்லத்தரசிகளுக்கும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். வீட்டில் அவர்கள் செய்யும் பணிகளுக்காக முறையான ஊதியம் கொடுக்கப்படும். இல்லத்தரசிகள் வீடுகளில் செய்யும் வேலை இதுவரை கண்டுகொள்ளப்படாமலும், ஊதியம் கொடுக்கப்படாமலும் உள்ளது. இது மாற்றியமைக்கப்படும். அதன் மூலம் அவர்களின் மாண்பு நிலைநிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் மத்தியில் கமல் பேசும்போது, ‘இந்த 7 அம்ச திட்டத்தில், தமிழகத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தபடும் என்று நாங்கள் சொன்னால், அதை கிண்டல் செய்கிறார்கள். இதை மய்யத்தின் அரசு அமைந்தால் செய்து காட்டுவோம்.

இந்தத் திட்டத்திற்கு எங்கிருந்து நிதி வரும் என்று எங்களைக் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் கட்டமைக்கும் ஊழலற்ற நேர்மையான அரசில் மக்களுக்கு நலத்திடங்களை செய்ய போதுமான நிதி கிடைக்கும். மக்களுக்கு செலவு செய்யாமல் எதற்காக அரசு நிதி. எல்லாவற்றுக்கும் ஊழலற்ற நேர்மையான அரசுதான் அடித்தளம். அந்த அடித்தளம் அமைந்துவிட்டால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் உட்பட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்திவிட முடியும். காரணம், இந்த அனைத்துத் திட்டங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது ஆகும்’ என்று கூறினார்.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்6 மணி நேரங்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்6 மணி நேரங்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்6 மணி நேரங்கள் ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்6 மணி நேரங்கள் ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்7 மணி நேரங்கள் ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா7 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா7 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.