இந்தியா
அதானி குழுமத்தில் எல்ஐசியின் முதலீடு நஷ்டத்திற்கு மாறியதா?

கௌதம் அதானி மற்றும் அவரது வணிக சாம்ராஜ்யத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் தாக்கம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல்ஐசி) மொத்த அளவைக் கருத்தில் கொண்டாலும், அதானி குழுமத்தில் அது செய்துள்ள முதலீடு மிகக் குறைவானது. எல்.ஐ.சியின் முதலீடு இதுவரை நஷ்டத்தில் இல்லை என்றால், தற்போது நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி ரூ.33,632 கோடியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27, அன்று அதானி குழுமத்தில் அதன் முதலீடுகளின் மதிப்பு ரூ.56,142 கோடியாக இருந்ததாக தெரிகிறது.
எல்ஐசி 10 அதானி குழும நிறுவனங்களில் 7ல் ரூ.30,127 கோடி முதலீடு செய்துள்ளது. சந்தை மதிப்பின்படி பிப்ரவரி 22, 2023 நிலவரப்படி, அதானி பங்குகளில் எல்ஐசியின் முதலீட்டின் மதிப்பு ரூ.33,632 கோடியாகக் குறைந்துள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு டிசம்பர் மாதம் வரை சுமார் ரூ.62,550 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 1 ஜனவரி 2023 முதல் 24 ஜனவரி 2023 வரை அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி அதன் 10 சதவீத பங்குகளை விற்றதாக கூறப்படுகிறது. அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி தனது 10 சதவீத பங்குகளை மேற்கூறிய காலகட்டத்தில் விற்றதாக வைத்துக்கொள்வோம். 22 பிப்ரவரி 2023 முடிவின்படி அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசியின் முதலீட்டின் மதிப்பு ரூ.33,632 கோடி என்று ஏற்கனவே கூறியுள்ளோம். மொத்த முதலீட்டில் இருந்து இந்த 10 சதவீதம் குறைக்கப்பட்டால், பிப்ரவரி 22, 2023 நிலவரப்படி, அதானி குழுமத்தில் எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு ரூ. 30,221 கோடி – லாபம் ரூ. 94 கோடி ஆகும்.
இந்த நிலையில் நேற்று CNBC-TV18 இன் படி, அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு மேலும் ரூ.500 கோடி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதானி குழுமத்தில் எல்ஐசி அதன் 10 சதவீத பங்குகளை விற்று இருந்தாலும், அதானி குழுமத்தில் எல்ஐசியின் முதலீடு நஷ்டமாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.