அழகு குறிப்பு
அதிகம் சிந்திக்கிறீர்களா?… உங்கள் தலை வழுக்கையாகி விடும் .. ஜாக்கிரதை…

தலை முடி உதிர்வது என்பது ஆண்களுக்கும் சரி.. பெண்களுக்கும் சரி.. மிகுந்த கவலைக்குரிய விஷயமாகி விட்டது. முடி கொட்டி விட்டால் தனக்கு கல்யாணத்திற்கு பண் கிடைக்காது என்ற பயம் ஆண்களுக்கு அதிகம். அதற்காக இந்த முடியை அழகாகக் காட்ட, நன்றாக வளர்க்க, பல்வேறு நிறங்களில் மின்ன என பல்வேறு வகைகளில் பல்வேறு ஷாம்புகள், ஆயில்கள், கிரீம்கள் என உற்பத்தி செய்யும் நுாற்றுக்கணக்கான கம்பெனிகள் பெருகி விட்டன.
அந்த நிறுவனங்களுக்கெல்லாம் தெரியும். இந்த பிரச்னையை சரி செய்யவே முடியாது என்று. ஆனாலும் இதை ஒரு பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றி கோடிகளை குவித்தும் அடங்காத பேராசையில் வித்தியாசமான விளம்பரங்கள் முலம் மக்களை மூளைச்சலவை செய்து கோடிகளை குவித்து வருகின்றனர்.
இந்த விளம்பரங்களின் வெற்று ஆரவாரங்களை உண்மை என்று நம்பி நடக்க முடியாத ஒரு விஷயத்திற்காக தங்கள் கையில் உள்ள பணத்தை செலவு செய்ய பணக்காரர்கள் மட்டுமல்ல.. சொற்ப வருமானம் பெறும் ஏழைகளும் தங்கள் கையிலிருக்கும் கொஞ்ச நஞ்ச காசையும் செலவழிக்க தயாராக உள்ளனர். இவர்களின் இந்த ஆசையை தங்கள் தொழிலுக்கு மூலதனமாக்கி பணக்காரர்களுக்கு 10 ரூபாய் ஷாம்பு என்றும் ஏழைக்கு 1 ரூபாய் ஷாம்பு என்றும் தயாரித்து விற்பளை செய்து கல்லா கட்டி வருகின்றனர் பெரு முதலாளிகள்.
முடி உதிர என்ன காரணம்?
நீண்ட நாட்களாக உள்ள மன அழுத்தம், நமது உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சில மாற்றங்கள் அல்லது சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் இன்னும் சிலருக்கு சில பல மரபியல் காரணங்களாலும் இந்த முடி உதிர்தல் ஏற்படுகிறது. காயம் பட்ட இடங்களில் முடி வளராது. தீக்காயம் ஏற்பட்டால் ரோமக்கால்கள் சேதமாகி முடி வளராது. டெர்மடைட்டில், சோரியாசிஸ், சில வகை அலர்ஜி காரணங்களாலும் முடி வளராது. அதிக இரத்த சோகையாலும் முடி உதிரும். அதிக கவலைப்பட்டாலும் முடி உதிரும். ஆனால் அதிகம் சிந்தித்தால் முடி உதிராது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக முடி உதிரும். இன்றைய இளைஞர்கள் தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்த்து கண்ட கண்ட ஜெல்களை பயன்படுத்துகின்றனர். அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் முடியைப் பலவீனப்படுத்துவதுடன் முடி உதிர்வுக்கும் காரணமாகிறது. செயற்கை எண்ணெய்களும் முடி உதிர்வை அதிகரிக்கச் செய்யும். செயற்கை எண்ணெய்கள் தலையில் இருக்கும் மயிர்க்கால்களை வறண்டுபோகச் செய்துவிடும்.
முடி உதிர்தலை எவ்வாறு தடுக்கலாம்?
நாள்தோறும் நல்ல சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ட கண்ட ஷாம்புகளை கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாலை நேர சூரிய ஒளியில் இருந்தால் தோலுக்கு நன்மைகளைத் தரும் விட்டமின் டி சத்து நிறைய கிடைக்கும். அணைத்து வகை கீரைகள், முளை கட்டிய பருப்புகள், நீர்சத்து உள்ள தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை பழம் ஆகிய பழவகைகளை உட்கொள்வது உண்டுவந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு முடி உதிராமல் தடுக்க முடியும். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளான முருங்கைக்கீரை பாதாம்பருப்பு மீன் உலர் பருப்புகள் மற்றும் பழங்கள் நெல்லிக்காய்(ஆம்லா) ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கெல்லாம் தற்போது பல்வேறு சிகிச்சைகள் அளிக்கிறேன் பேர்வழி என்று பல மருத்துவமனைகளும் வேறர்கேர் சென்டர்களும் உருவாகி மக்களிடமிருந்து காசை பறித்து வருகின்றன.
முடி நரைத்து விட்டால் அதற்கு நிறம் கொடுக்கவும் பல்வேறு நிறமூட்டிகள் இப்போதெல்லாம் சந்தைகளில் கிடைக்கின்றன.
அவற்றையெல்லாம் தடுக்க முடியாது. தற்காலிக தீர்வுகள் கிடைக்கலாம். அவற்றால் நிரந்தரமான சில பக்க விளைவுகள்தான் கிடைக்கும். எனவே இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறந்த வழி. எந்த பகட்டு விளம்பரங்களையும் நம்பாதீர்கள். பணத்தையும் ஆரோக்கியத்தையு ம் இழக்காதீர்கள்.
பெஸ்ட் ஆஃப் லக்.















