ஆன்மீகம்
பிரகாசிக்கும் குரு: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு அதிகரிக்கும்!

பிப்ரவரி 4 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!
வசந்த பஞ்சமிக்குப் பிறகு, பிப்ரவரி 4ம் தேதி மதியம் 1:46 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த மாற்றம் மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய 5 ராசிகளுக்கு சிறப்பான பலன்களை வழங்கும்.
மேஷம் (Aries)
குருவின் வக்ர நிவர்த்தியால் மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார வளர்ச்சி காண்பார்கள். திடீர் பணவரவு மற்றும் தொழிலில் வளர்ச்சி இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். எந்த புதிய முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கல்வியில் முன்னேற்றம் காணலாம். பணவரவு அதிகரிக்கும்.
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வணிகம் மற்றும் முதலீடுகளில் லாபம் பெரும். திடீர் பணவரவு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணிகள் வெற்றிகரமாக முடியும்.
விருச்சிகம் (Scorpio)
குருவின் ஏழாம் பார்வையால் பிள்ளைகளின் கல்வி, தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய நல்ல செய்திகள் வரும். வாழ்க்கைத்துணையுடன் உறவு மேம்படும். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்புகள் பெறுவார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். நிலுவையிலிருந்த வேலைகள் முடியும்.
