ஆன்மீகம்
இன்று குரு பெயர்ச்சி 2025: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன்?

இன்று குரு பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கும் குருவின் கடவுள் பார்வை! யாருக்கு எப்படி பலன்?
ஜோதிட உலகத்தில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் குரு பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. மே 14, 2025 அன்று குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடமாற்றம் செய்யிறார். சுப கிரகமான குரு பொதுவாக நல்லதே தருவார் என ஜோதிடர்கள் நம்புகின்றனர். “குரு பார்க்க கோடி நன்மை” என்பது இதற்கான எடுத்துக்காட்டு.
இந்த இடமாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பலவகையான மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. பண நிலை, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம், ஆன்மீகம், தொழில், திருமணம் என பல பரிமாணங்களில் குரு புதிய கதவுகளைத் திறக்கவுள்ளார்.
இப்போது ராசிபடி குரு பெயர்ச்சி பலன்கள்:
மேஷம்: அதிர்ஷ்டம் கூடும், வீடு-வாகன கனவு நனவாகும், சுப காரியங்கள் நடைபெறும்.
ரிஷபம்: பேச்சாற்றல் மேம்படும், வருமானம் உயரும், நிதி நிலை மேம்பாடு.
மிதுனம்: பண வரவு அதிகரிக்கும், திருமண யோகம், ஆசைகள் நிறைவேறும்.
கடகம்: ஆன்மீக ஈடுபாடு, நற்பெயர் அதிகரிப்பு, முயற்சிகளில் வெற்றி.
சிம்மம்: குடும்ப நிம்மதி, வருமான வளர்ச்சி, நிதிச் சிக்கல்கள் குறைதல்.
கன்னி: நிதி பிரச்சனைகள் தீரும், வீடு வாங்கும் வாய்ப்பு, வெற்றி கிடைக்கும்.
துலாம்: நிதிநிலை வலுப்பெறும், ஆன்மீக பயணம், லாபகரமான முடிவுகள்.
விருச்சிகம்: உடல்நல சிக்கல்கள், மன அழுத்தம், பணச் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு: குடும்ப ஒற்றுமை, வேலை மற்றும் தொழில் முன்னேற்றம், சொத்து கனவு நிறைவேறும்.
மகரம்: முதலீட்டில் லாபம், சொத்துப் பேரங்கள், வெற்றியை கொடுக்கும் முடிவுகள்.
கும்பம்: குடும்ப உறவில் இணக்கம், பண லாப வாய்ப்பு, உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்: முதலீட்டில் பெரும் லாபம், திறமைக்கு அங்கீகாரம், செல்வாக்கு மேம்பாடு.














