வணிகம்
ஜூலை-செப்டம்பர் 2025: அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும்

GPF வட்டி விகிதம் ஜூலை – செப்டம்பர் 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்சாக தகவல்!
மத்திய அரசு ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டிற்கு பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வட்டி விகிதத்தை 7.1% ஆக அறிவித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு நிதி சேமிப்பில் பெரும் உதவியாக அமையும்.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த வட்டி விகிதம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை நடைமுறையில் இருக்கும். கடந்த காலாண்டில் இருந்த விகிதத்தையே தொடர்ந்து இக்காலாண்டிலும் நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த திட்டங்களுக்கு இது பொருந்தும்?
இந்த 7.1% வட்டி விகிதம் பின்வரும் திட்டங்களுக்கு பொருந்தும்:
மத்திய சேவைகள் பொது வருங்கால வைப்பு நிதி
பங்களிப்பு நிதி (Contribution Provident Fund)
அகில இந்திய சேவைகள் பிஎஃப்
ரயில்வே பிஎஃப்
பாதுகாப்பு பிஎஃப்
இந்திய ராணுவ, கடற்படை தொழிலாளர் பிஎஃப்
ஆயுதப்படை பிஎஃப் மற்றும் அதிகாரிகள் பிஎஃப்
GPF, PPF மற்றும் EPF இடையிலான வேறுபாடு:
GPF – அரசு ஊழியர்களுக்கே மட்டுமே, ஓய்வுடன் பணம் முழுமையாக திருப்பி பெறலாம்.
PPF – அனைவருக்கும் அனுமதிக்கப்படும். 15 ஆண்டுகள் லாக்-இன் காலம்.
EPF – தனியார் நிறுவன ஊழியர்களுக்கானது. தற்போது வட்டி விகிதம் 8.25%.













